மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கைக்கு முன் திரிணாமுல் தீவிர ஆயத்தம் - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
கொல்கத்தா, 02 மே (ஹி.ச.) மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன், முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர், கட்சியின் அனைத்து வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் காணொலி வாயிலாக ஆலோச
மம்தா


கொல்கத்தா, 02 மே (ஹி.ச.)

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன், முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர், கட்சியின் அனைத்து வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

291 தொகுதிகளில் பணியாற்றும் முகவர்களுக்கு, வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் வரை மையங்களை விட்டு வெளியேறக் கூடாது என்றும், ஏதேனும் அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனடியாக கட்சித் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே மேற்பார்வையாளர்களாக நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

தேர்தல் ஆணையத்தின் ஏப்ரல் 29 சுற்றறிக்கையின்படி,

மத்திய அரசு ஊழியர்களுடன் மாநில அரசு ஊழியர்களும் மேற்பார்வையாளர்கள் அல்லது இணை மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது பதிவாகும் சிசிடிவி காட்சிகள் 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P