மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் கைது
கள்ளக்குறிச்சி, 02 மே (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ் என்பவர் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந
Prison


கள்ளக்குறிச்சி, 02 மே (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ் என்பவர் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு பள்ளியில் இருந்து நின்று விட்டார்.

இதனை அடுத்து அதே பள்ளியில் படித்த சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த பள்ளி ஆசிரியர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டிற்கு வந்த தன் தந்தையிடம் நடந்ததை கூறிய பள்ளி மாணவி உடனடியாக இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் சின்னசேலம் போலிசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி ஆசிரியர் சுரேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN