Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சூர், 02 மே (ஹி.ச.)
கேரள மாநில திருச்சூர் மனத்தலாவில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில், வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படு காயமடைந்தனர்.
அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, 42 வயதான மனோஜ், அவரது மனைவி 34 வயதான ஸ்மிருதி, மற்றும் 7 வயது மகள் த்வனி ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தனர்.
மின்னல் தாக்கியதில் வீட்டின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு, சுவர் இடிந்து குடும்பத்தினர் மீது விழுந்தது.
உடனடியாக செயல்பட்ட உறவினர்கள், காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது மூவரின் உடல் நிலையம் சீரான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இப்பகுதியில் தொடர்ச்சியாக மின்னல் தொடர்பான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b