அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு ‘போர்வாள்’ இன்று வெளியீடு
சென்னை, 20 மே (ஹி.ச) தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 47 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிட
AIADMK’s Official Daily, ‘Porvaal’, Launched T


சென்னை, 20 மே (ஹி.ச)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 47 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்நிலையில் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.,க்கள் நம்பிக்கை தீர்மானத்தின்போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் அதிமுகவுக்குள் மீண்டுமொரு உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது.

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (20.5.2026), அஇஅதிமுக அதிகாரப்பூர்வ நாளேடாக `போர்வாள்’ என்னும் நாளிதழை அறிமுகம் செய்து, போர்வாள் நாளிதழின் முதல் முன்னோட்ட நாளிதழை வெளியிட்டார்.

இந்நிகழ்வின்போது, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம், அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

அதிமுகவின் நாளிதழாக இருந்தவந்த ‘நமது அம்மா’ நாளிதழ் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வந்தநிலையில், இபிஎஸ் ‘போர்வாள்’ என்ற பத்திரிகையை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாளிதழில் இபிஎஸ் அவரது தரப்பு ஆதரவு செய்திகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

Hindusthan Samachar / vidya.b