அமைச்சரவையில் திருமாவளவன் இடம் பெற வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம் - ஆதவ் அர்ஜூனா
சென்னை, 20 மே (ஹி.ச.) தமிழக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் அயோத்திதாசப் பண்டிதர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் ப
ஆதவ்


சென்னை, 20 மே (ஹி.ச.)

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் அயோத்திதாசப் பண்டிதர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சமூகநீதி கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இடம்பெற வேண்டும் என்றும், அதனை முதலமைச்சர் விஜயும் விரும்புவதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியும் தமிழக அமைச்சரவையில் இணைய வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி வருவதாகக் கூறிய அவர், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ள சூழலில் கூட்டணி மற்றும் சமூகநீதி சார்ந்த கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

அத்துடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்றும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்வதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அமைச்சரவை விரிவாக்கம் குறித்த இறுதி முடிவு தொடர்பாக முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P