Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மே (ஹி.ச)
தமிழ்நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்லும் இலக்குடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்ல செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த இலக்கை அடைவதற்காக எனது அலுவலகப் பணிகளை தினமும் காலை 7 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை உயர் அலுவலர்கள், வீரர்–வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் வளாகத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு சங்க நிர்வாகிகள் எவ்வித சிரமமுமின்றி நேரடியாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ