ஸ்விட்ச் அழுத்துவதைத்தவிர ஜெகன் செய்தது எதுவும் இல்லை - ஷர்மிளா குற்றச்சாட்டு
விஜயவாடா , 20 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்எஸ்.ஷர்மிளா, ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் விமர்சனம் வெளியிட்டார். விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:– ஒய்எஸ்ஆர் பெயரை கூறி “ஒரு வாய்ப
A


விஜயவாடா , 20 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்எஸ்.ஷர்மிளா, ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் விமர்சனம் வெளியிட்டார்.

விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:–

ஒய்எஸ்ஆர் பெயரை கூறி “ஒரு வாய்ப்பு” கேட்டு முதல்வரான ஜெகன், தனது 5 ஆண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் செய்யவில்லை.

ஸ்விட்ச் (பட்டன்) அழுத்துவதைத்தவிர வேறு எதுவும் செய்யவில்லை. பட்டன் அழுத்துவதால் மட்டும் மீண்டும் முதல்வராக முடியாது.

அப்போது எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்குக் கூட சந்திப்பு நேரம் வழங்கப்படாத நிலை இருந்தது.

தந்தையான ஒய்எஸ். ராஜசேகர ரெட்டி அவர்களின் கொள்கைகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த ஜெகன், பின்னர் அந்தக் கொள்கைகளையே சீரழித்தார்.

முந்தைய ஆட்சியில் மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்திய ஒய்எஸ்ஆர்சிபி நிர்வாகிகள், தற்போது போராட்டங்களில் ஈடுபடுவது வெட்கக்கேடானது.

மேலும், மத்திய அரசில் உள்ள பாஜக அரசுடன் ஜெகன் மறைமுக உடன்பாடு வைத்திருந்தார்.

இவ்வாறு ஷர்மிளா கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA