Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 20 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் , மீனவர்கள் மற்றும் விவசாயிகள் நலனே தங்கள் அரசின் மிக முக்கிய முன்னுரிமை என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
மீனவர்களின் இடம்பெயர்வை தடுப்பதுடன், அவர்களுக்கு உள்ளூரிலேயே மேம்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் முக்கிய குறிக்கோள் என அவர் கூறினார்.
மாநிலம் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை விட, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனே அரசுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என உறுதியளித்த அவர், மக்கள் நலனுக்காக செயல்படும் அரசாக நாங்கள் தொடர்கிறோம் என்றார்.
மீனவர்களின் நலனுக்காக ‘மீனவர் சேவையில்’ திட்டம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும் ரூ.20,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த தொகை எந்தவித இடைத்தரகர் தலையீடும் இல்லாமல், முழு வெளிப்படைத்தன்மையுடன் நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடலோர பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, எதிர்காலத்தில் மீனவர்களின் இடம்பெயர்வை முழுமையாக தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பவன் கல்யாண் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA