திராவிட இயக்கம் உருவாக வித்திட்டவர் -அயோத்தி தாசர்...!
தமிழ்நாடு, 20 மே (ஹி.ச.) பண்டிதர் அயோத்திதாசர் தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை, சாதி ஒழிப்புப் போராளி மற்றும் திராவிடச் சிந்தனைகளின் முன்னோடி ஆவார். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக மற்றும் அரசியல் உரிமைக்காகத் தன் வாழ்நாள் முழுவதும்
க


தமிழ்நாடு, 20 மே (ஹி.ச.)

பண்டிதர் அயோத்திதாசர் தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை, சாதி ஒழிப்புப் போராளி மற்றும் திராவிடச் சிந்தனைகளின் முன்னோடி ஆவார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக மற்றும் அரசியல் உரிமைக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு மிக முக்கிய ஆளுமை ஆவார்

சித்த மருத்துவரான அயோத்தி தாசர் 1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார்.

இவருடைய இயற்பெயர் காத்தவராயன் ஆகும்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கந்தசாமி மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி கற்பித்த தன் குருவான 'அயோத்திதாச பண்டிதர்' மீது கொண்ட மதிப்பால், தன் பெயரை 'அயோத்திதாசர்' என மாற்றிக் கொண்டார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் ஒரு சிறந்த சித்த மருத்துவர், தத்துவஞானி மற்றும் எழுத்தாளர் ஆவார்.

திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர் ஆவார்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார்.

திராவிட மகாஜன சபை இவரால் கி.பி.1891ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அயோத்தி தாசர் 1885ஆம் ஆண்டில் திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார்.

சுமார் 25 நூல்கள், 30 தொடர்கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை, அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் என சில நூறு கட்டுரைகளை எழுதிய இவர் 1914ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J