மக்களவையில் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் தேவை - பாஜகவின் சி.ஆர். கேசவன் விமர்சனம்
புதுடெல்லி, 20 மே (ஹி.ச.) இந்தியா முன்னெப்போதும் இல்லாத பொருளாதார புயலை எதிர்கொள்ளவிருப்பதாக நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி எச்சரித்திருந்தார். பிரதமர் செயல்படுத்தியுள்ள நிதி மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் தோல்வியடையும் என்றும், அதன
BJP's C.R. Kesavan Criticizes


புதுடெல்லி, 20 மே (ஹி.ச.)

இந்தியா முன்னெப்போதும் இல்லாத பொருளாதார புயலை எதிர்கொள்ளவிருப்பதாக நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி எச்சரித்திருந்தார்.

பிரதமர் செயல்படுத்தியுள்ள நிதி மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் தோல்வியடையும் என்றும், அதன் பாதிப்பை சாமானிய மக்களே அதிகம் எதிர்கொள்வார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்தை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கடுமையாக நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேசவன் கூறியதாவது,

தொடர் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக ராகுல் காந்தி அரசியல் சமநிலையை இழந்துவிட்டார். அவரது வினோதமான கருத்துகள், அவர் பொய்களால் ஆன சொந்த உலகில் வாழ்வதையே காட்டுகின்றன.

ராகுல் காந்தி இந்திய பொருளாதாரம் 'செத்துவிட்டது' என்றார்.

ஆனால் உண்மையில் இந்தியாதான் பொருளாதாரத்தில் இன்று உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடு. மக்கள் அவரை நம்புவதில்லை.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா உலகளவில் 11-வது இடத்தில் இருந்ததாது. நொறுங்கும் ஐந்து” பொருளாதாரங்களில் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் தற்போது இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.

சுமார் 27 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 'விக்சித் பாரத்' இலக்கை நோக்கி சீர்திருத்தங்களுடன் நாடு முன்னேறுகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அதிகாரம் பெற்று வருகின்றனர்.

இந்தியாவுக்கு மக்களவையில் இதைவிட சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b