தமிழக கோவில் நிதி முதலீட்டு விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, 20 மே (ஹி.ச) தமிழக கோவில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில் அறநிலையத்துறை சட்டத்தின் முதலீட்டு விதிகளில் செய்யப்பட்ட திருத்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்
High court


சென்னை, 20 மே (ஹி.ச)

தமிழக கோவில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில் அறநிலையத்துறை சட்டத்தின் முதலீட்டு விதிகளில் செய்யப்பட்ட திருத்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை டி.ஆர். ரமேஷ் தாக்கல் செய்துள்ளார். மனுவில், கோவில் நிதிகளை தமிழக அரசின் நிறுவனங்களான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (TNPFC), தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம் (TNTDFC) உள்ளிட்ட அமைப்புகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து சவால் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு, மாநில அரசு, ரிசர்வ் வங்கி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (TNPFC), தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம் (TNTDFC) ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ