10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - 97.57 சதவீத தேர்ச்சியுடன் புதுக்கோட்டை முதலிடம்
சென்னை, 20 மே (ஹி.ச.) தமிழக அரசு பாட திட்டத்தின் கீழ் பயின்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. 8,82,806 பள்ளி மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் தேர்வு
10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - 97.57 சதவீதம் தேர்ச்சியுடன் புதுக்கோட்டை முதலிடம்


சென்னை, 20 மே (ஹி.ச.)

தமிழக அரசு பாட திட்டத்தின் கீழ் பயின்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது.

8,82,806 பள்ளி மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

அதன்படி, 94.31 சதவீதம் மாணவர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதாவது, 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 92.15 சதவீதம் மாணவர்களும், 96.47 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

5171 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1931 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் 97.57 சதவீதம் பெற்று புதுக்கோட்டை மாவட்டம் முதலிடமும், 97.54 சிவகங்கை மாவட்டம் 2ம் இடம், 97.41 சதவீதம் பெற்று தஞ்சாவூர் 3ம் இடம், 97.31 திருச்சி மாவட்டம் 4ம் இடம், 97.30 கன்னியாகுமரி 5ம் இடம் பெற்றுள்ளன.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 11416 பேர் இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b