Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மே (ஹி.ச.)
10 ஆம் வகுப்பு மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் எழுதிய பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 9 லட்சம் பேர் எழுதிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,105
(94.31 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
92.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.47 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b