Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 20 மே (ஹி.ச.)
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு நேற்று பூக்கள் வரத்து அதிகரித்ததால் மல்லிகை பூவின் விலை கடுமையாக சரிந்தது.
முகூர்த்த நாள் மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பூ விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விளைவிக்கப்படும் பல்வேறு வகை பூக்கள் இந்த மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், புதுச்சேரி மற்றும் கேரளாவுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் காரணமாக பூக்களின் வரத்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று மல்லிகை பூ அதிக அளவில் வரத்தாகியதால் கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை மட்டுமே விற்பனையானது.
வாசனைத் திரவிய தொழிற்சாலைகளுக்கு மல்லிகை கிலோ ரூ.200க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.2000 முதல் ரூ.3000 வரை விற்பனையான நிலையில், தற்போது விலை சரிந்ததால் பூ விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதரபூக்களின் விலை விவரம் வருமாறு:
முல்லை – கிலோ ரூ.80
செவ்வந்தி – ரூ.100 முதல் ரூ.150
கனகாம்பரம் – ரூ.200
செண்டுமல்லி – ரூ.40
அரளி – ரூ.200
சம்பங்கி – ரூ.15
ரோஸ் – ரூ.100
பட்டன் ரோஸ் – ரூ.200
கோழிக்கொண்டை – ரூ.60
Hindusthan Samachar / GOKILA arumugam