ஈரோடு அருகே டாஸ்மாக் ஊழியருக்கு சரமாரி தாக்குதல் - அரசு மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு 20 மே (ஹி.ச.) ஈரோடுஅடுத்த சூலை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், விற்பனையை ஒழுங்குபடுத்த டாஸ்மாக் விற்பனையாளர் சொக்குமுத்த
தாக்குதல்


ஈரோடு 20 மே (ஹி.ச.)

ஈரோடுஅடுத்த சூலை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், விற்பனையை ஒழுங்குபடுத்த டாஸ்மாக் விற்பனையாளர் சொக்குமுத்து, வாடிக்கையாளர்களை வரிசையில் நின்று மதுபானம் வாங்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால்ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஒருவர், சொக்குமுத்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த சொக்குமுத்து, உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்ததாக்குதல் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam