கேரள சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக ஜி. சுதாகரன் பதவியேற்பு
திருவனந்தபுரம், 20 மே (ஹி.ச.) கேரள மாநிலத்தில் நேற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கேரளாவில் அதிகாரபூர்வமாக ஆட்சிப் பொறுப்பேற்றது. இதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசின் ப
G. Sudhakaran Sworn In as Pro-tem Speaker of Kerala Legislative Assembly


திருவனந்தபுரம், 20 மே (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் நேற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கேரளாவில் அதிகாரபூர்வமாக ஆட்சிப் பொறுப்பேற்றது.

இதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசின் பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில், 61 வயதான வி.டி. சதீசன் கேரளாவின் 13-வது முதலமைச்சராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.

பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் சதீசன் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கொள்கை நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் கேரள சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஜி. சுதாகரன், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் ஆகியோர் முன்னிலையில் ராஜ் பவனில் இன்று பதவியேற்றார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது மற்றும் நிரந்தர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவை நடவடிக்கைகளை நடத்துவது தற்காலிக சபாநாயகரின் முக்கிய பணியாகும்.

அனுபவம் வாய்ந்த ஜி. சுதாகரன் இப்பொறுப்பை ஏற்றிருப்பது சட்டப்பேரவை நடவடிக்கைகளை சுமுகமாக நடத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மாற்றம், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான மாநிலத்தின் நிர்வாகப் போக்கை தீர்மானிக்கும் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b