அதிரடியாக குறைந்த தங்கம் விலை - மக்கள் மகிழ்ச்சி..!
சென்னை, 20 மே (ஹி.ச.) மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியாகவே தான் இருக்கிறது. கடந்த 13ஆம் தேதி ஒரே நாளில் சவரனு
தங்கம்


சென்னை, 20 மே (ஹி.ச.)

மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியாகவே தான் இருக்கிறது.

கடந்த 13ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.5000க்கும் மேல் உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதை தொடர்ந்து கடந்த மே 16ஆம் தேதி தங்கம் விலை கணிசமாக குறைந்தது. அதே விலையே 3 நாட்கள் நீடித்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்தது.

22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,870க்கும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750க்கும், சவரனுக்கு ரூ.960க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கும், ஒரு கிலோ ரூ.2,85,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P