சாட் ஜிபிடி-யே தப்பு பண்ணும், பகுத்தறிவுதான் முக்கியம் - கனிமொழி எம்.பி பேச்சு
கோவை, 20 மே (ஹி.ச.) கோவை பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பேசும் போது, சுயமரியாதை திருமணம் செய்த மணமகளுக்கு வாழ்த்துக்கள
Kanimozhi MP


கோவை, 20 மே (ஹி.ச.)

கோவை பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசும் போது,

சுயமரியாதை திருமணம் செய்த மணமகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர், மேடையில் இருக்கின்ற மணமக்களை எடுத்துக் கொண்டோம் என்றால், இருவரும் சிறப்பாக படித்து உள்ளவர்கள், நான் மணமகன் அருகிலே அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்த போது அவர் தன் தந்தையின் தொழிலை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருப்பதாக கூறினார்.

மணமகளை பற்றி கேட்ட போது அவர் யு.பி.எஸ் தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்வதாக பெருமையோடு கூறினார். இப்படிப்பட்ட திருமணத்தை நாம் 50 ஆண்டுகளுக்கு முன்பாக 100 ஆண்டுகளுக்கு முன்போ நிச்சயமாக சிந்தித்து பார்த்து இருக்க முடியாது என்றும், மணமகளும் அதிகமாக படித்து இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்காது நிச்சயமாக, மணமகளுக்கும் படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்காது என்றும், இந்த தடைகளை எல்லாம் தாண்டி இன்று இருவரும் கற்றுத் தேர்ந்தவர்களாக, படித்தவர்களாக தனக்கென்று ஒரு எதிர்காலத்தை, தனக்கு என்று தொழிலை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை இருக்கக் கூடியவர்களாக இன்று இந்த மேடையிலே அமர்ந்து கொண்டு உள்ளதாகவும், நிச்சமாக மணமகன் தந்தை செய்யும் கொண்டு இருக்கிற தொழிலை செய்வது கட்டாயம் இல்லை என்றவர், ஒரு கால கட்டத்தில் அந்த கட்டாயத்தில் இருந்ததாகவும், ஆனால் இன்று அவர் இதை தேர்ந்தெடுக்கிறார் என்றார்,

யாரும் ? கட்டாயப்படுத்தி சமூகம் எல்லாம் இதை செய்ய வேண்டும் என்று சொல்லி நிர்பந்திக்கவில்லை என்றும், அதேபோல் மணமகள் கேட்டால் தான் வீட்டில் இருக்கப் போறேன் என்று கூறவில்லை, தான் படித்து விட்டு யு.பி.எஸ் தேர்வுகள் எழுதி விட்டு அதற்குப் பிறகு இந்த நாட்டின் நிர்வாகத்திலே பங்கேற்க பங்கேற்று கொள்ளக் கூடிய கனவோடு இருப்பதாகவும், என்று கூறிய மணமகள் இந்த நிலை வருவதற்கு எத்தனை ஆண்டு காலமாக தந்தை பெரியார் தொடங்கி, திராவிட இயக்க தலைவர்கள் எல்லாம் போராடி இருக்கிறார்கள். பாடுபட்டு இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட, புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பாக இந்த திருமணம் மேடை அமைந்து இருப்பதாக தெரிவித்தவர், படிக்கக் கூடாது என்ற ஜாதியில் பெயரால், படிக்கக் கூடாது நீ பெண்ணாக பிறந்து விட்டாய் என்று சொன்னார்கள், அந்த காலங்கள் எல்லாம் அந்த சிந்தனைகளை எல்லாம் உடைக்க முதலில் இந்த மேடையில் ஒரு தடி கொடுத்ததாகவும், அதை மணமக்களிடமே கொடுத்து விட்டதாவும் கூறியவர், ஏனென்றால் அடுத்த தலைமுறை அந்த தடியோடு, அந்த சிந்தனைகளோடு அடுத்த தலைமுறை உருவாக வேண்டும், அந்த தடி எப்படிப்பட்ட தடி என்றால், ஒரு காலகட்டத்தில் பெண் படிக்கக் கூடாது. நீ இந்த ஜாதியாக இருந்தால் படிக்க கூடாது என்பதை எதிர்த்து ஓங்கியதடி அந்தத் தடி என்றவர் அதைத்தான் பார்த்து இன்றைக்கும் நிறைய பேர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தந்தை பெரியாரின் பெயரை சொன்னாலே இன்றைக்கு பல பேருக்கு இத்தனை ஆண்டுகள் தான் மறைந்தும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னாலும் ஒரு மனிதனுடைய பெயரை சொன்னால் அது பல பேருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது என்றால், அது தந்தை பெரியார்களுடைய பெயர் என்றார். அதனால் அடுத்த தலைமுறை மட்டுமல்ல இன்று இருக்கக் கூடிய நாமும் தந்தை பெரியார் இந்த மண்ணிற்காக என்ன செய்திருக்கிறார்கள் ? என்ற மாற்றங்களுக்கு எல்லாம் அவர் உந்து சக்தியாக இருந்திருக்கிறார். என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றவர், படிப்பதை தெரிந்து கொண்டு அதற்கு அப்புறம் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம், ஆனால் தெரிஞ்சுக்காமலே கட்டமைக்கப்படுவதாகவும், குறிப்பிட்டுச் சொன்னார்கள் பெரியார் அவர்கள் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதனால் நீங்கள் நம்பக் கூடாது என்று சொன்னார். அவர், இவர் சொன்னார் என்பதை தாண்டி முக்கியமாக நம்ப கூடாது. ஒன்று இருக்கிறது என்றால் இந்த இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி பயன்படுத்தி கொண்டு என்ன ? மாறுதல்களை எல்லாம் என்ன ? சிந்தனை போக்குகள், எல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய வழிவகை இந்த நாட்டில் நடந்து கொண்டு உள்ளதாக தெரியும் என்றும், அதை தாண்டி இன்னைக்கு அதையே பயன்படுத்தி நல்ல விஷயங்களையும் கொடுக்கலாம், நம்முடைய சித்தாந்தங்களை, நம்முடைய கருத்துக்களையும், நம்முடைய வலிமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலே அதில் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள், எந்த கருத்துக்களை கொண்டு இருந்தவர்கள் ஆக இருந்தாலும் தவறில்லை என்றும், ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு சாதாரண உதாரணத்திற்கு சொல்லுகிறேன் என்றால் நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே தமிழ்நாட்டிலேயே ஒரு பெண் அமைச்சர் சுகாதாரத் துறையில் இருந்து உள்ளதாகவும் அதற்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தொடர்ந்து அமைச்சரவையில் சத்தியவாணி முத்து அவர்கள் தொடங்கி எந்த அமைச்சர் ஆக இருந்தாலும் அங்கே பெண்கள் பொறுப்பு வைத்து வந்ததாகவும் தெரிவித்தவர். ஆனால் இன்று மிகப் பரவலாக சொல்லப்படக் கூடிய முதல் முறையாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஒரு பெண் அமைச்சர் உருவாகி இருக்கிறார் என்று தவறான செய்திகளை பரப்பப்படுகிறது. இது அரசியலாக சொல்லவில்லை, இப்படிப்பட்ட செய்திகள் இது அரசியல் தாண்டி எல்லா விஷயங்களையும், சுகாதார விஷயங்களும் தான் இன்று எல்லோரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவுரை கூறுவார்கள். குடும்பம் எப்படி ? நடத்துவது என்று அப்படி என்று நிறைய செய்திகள் பரப்புரைகள் சொல்லப்படும் குழந்தைகளை எப்படி ? வளர்ப்பது என்று பல செய்திகள் ஒவ்வொரு நாளும் வரும் என்ன ? சாப்பிடலாம் என்ன ? சாப்பிட கூடாது எது நல்லது அப்படிப்பட்ட செய்திகள் வரும்பொழுது, தகவலையும் தாண்டி இன்று நாம் நின்று கொண்டு இருப்பது யார் ? அந்த கருத்துக்களை சொல்கிறார்கள். அவர்களுடைய தகுதி என்ன ? அப்படி என்று நாம் சிந்திக்க வேண்டிய ஒரு சூழலில் நின்று கொண்டு இருக்கிறோம், நாளைக்கு இவர்களுக்கு, அவர்களுக்கு இன்று திருமணமாகி இருக்கக் கூடிய தம்பதிகளுக்கும் நிச்சயமாக அவர்கள் முடிவு செய்யக் கூடிய கால கட்டத்தில் ஒரு குழந்தை இருக்கும் பொழுது, அதை வளர்க்க அந்த நேரத்தில் ஒரு கால கட்டத்தில் பாட்டி பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் சொல்லுவார்கள் அது நமக்கு எது வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளலாம், வேண்டாததை விட்டு விடலாம், ஆனால் இன்று திரும்பத், திரும்ப இன்ஸ்டால் கிராம் வழியாக சொல்லக் கூடிய செய்தி சரியா ? தவறா ? என்று புரிந்து கொள்ளாமல் நாம் அதை கண்மூடித்தனமாக நம்பி விடுகிறோம். அதை எப்படிப்பட்ட பாதிப்புகளை நம் உருவாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதனால் இந்த தகவல் எது சரியானது என்று பகுத்தறிவு வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் அன்றே கூறினார். அது பகுத்தறிவை வளர்த்துக் கொண்டே வந்தோமேயானால் அந்தப் பகுத்தறிவு நமக்கு சுத்தி இருக்கின்ற சொல்லக் கூடிய செய்திகளாகட்டும், தொழில்நுட்பம் சார்ந்த பிறகு நமக்கு இன்ஸ்டாகிராம் சோசியல் மீடியா சொல்ல கூடிய செய்திகளாகட்டும் இன்றைக்கு சேர் ஜி.பி.டி கேள்வி கேட்டால் எல்லா நேரத்திலும் சொல்லப்படுகிறது. அங்கேயும் தவறான பதில்கள் வரப்படுகிறது. அதிகமாக கேள்வி கேட்டால் சாரி மன்னிக்கவும் எனக்கு தெரியாது என்று கூறுகிறது.

இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு நமக்கு பகுத்தறிவு வேண்டும் அதைத் தான் தந்தை பெரியார் அவர்கள் காலம், காலமாக சொன்னார்கள் என்றும் நீங்கள் நினைக்கலாம் என்று இவ்வளவு பெரிய தோல்விக்கு பிறகும் திருமணத்தை நடத்தி விட்டு சோசியல் மீடியா பற்றி பேசிக் கொண்டு உள்ளதாகவும் பேசுவார்கள், ஆனால் நாங்கள் வந்த வழி பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருடைய தோல்விக்கு பிறகு எல்லாம் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு தேடிக் கொண்டு இருந்ததாகவும் அப்பொழுது அவரை காணவில்லை என்றும் சிறிது நேரம் கழித்து வந்தவர் எங்கே என்று கேட்டார்கள் அப்பொழுது அவர் தேர்தல் முடிவு வந்த பிறகு பட்டினத்தார் படம் வந்து உள்ளது அதை பார்க்க சென்றாராம், அதனால் தேர்தல் என்பது மக்கள் உடைய முடிவு.

அதை தலைவணங்கி ஏற்றுக் கொள்வதாகவும், ஆதலால் அதைப்பற்றி பேசுவதற்கு அவசியம் எங்களுக்கு இல்லை. அடுத்து உங்களோடு நின்று பயணிப்போம், உங்களோடு தான் இருப்போம் என்பதை இந்த மேடையிலும் இந்த சுயமரியாதை திருமண மேடையிலும் தெரிவித்துக் கொள்வதாகவும், அதே நேரத்தில் மணமக்கள் பெரியார் அவருடைய தந்தை பெரியார் திராவிட இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டு இருக்கக் கூடியவர் பிள்ளைகளுக்கு நான் அதிகமாக எடுத்துச் சொல்லக்கூடிய அவசியம் இல்லை.

யாருக்குமே எடுக்கக் கூடிய அவசியமில்லை. இன்று எல்லா விஷயமும் உங்கள் கைகளில் இருக்கிறது. தந்தை பெரியார் அவர்களுடைய கனவாக இருக்கக் கூடிய ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லக் கூடிய சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்களாக பகுத்தறிவு மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்க கூடியவர்களாக இந்த மண் மீதும், மொழி மீது மாறாத, மீளாத பற்றை வைத்து இருக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க கூடியவர்களாக நீங்க வாழ் வாழ்வு என்று கேட்டுக் நன்றி கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN