Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 20 மே (ஹி.ச.)
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கர்நாடக சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் பிரிவு அதிகாரிகள் அந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை காவல்துறை இயக்குநர் அலோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடிகர் தர்ஷன் தற்கொலைக்கு முயன்றதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. சிறை வளாகத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
அவர் நலமாக உள்ளார். எனவே, வதந்திகளை யாரும் நம்பி பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது தீவிர ரசிகரான ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரை பற்றிய தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், சிறைத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA