கரூர் துயர சம்பவத்தின் போது பணியாற்றிய அதிகாரிகள் உட்பட பலர் மாற்றம் – 10 புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்
கரூர், 20 மே (ஹி.ச.) கரூர் மாவட்டத்தில் பணியாற்றிய பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தெற்கு, வடக்கு மண்டலங்களுக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், மாவட்டத்திற்கு புதிதாக 10 காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள
டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்


கரூர், 20 மே (ஹி.ச.)

கரூர் மாவட்டத்தில் பணியாற்றிய பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தெற்கு, வடக்கு மண்டலங்களுக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம், மாவட்டத்திற்கு புதிதாக 10 காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தின் போது பணியாற்றிய அதிகாரிகள் பலரும் இந்த மாற்றப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை டிஎஸ்பி கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தர்மபுரி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், கரூர் நகர காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் உள்ளிட்ட 10 காவல் ஆய்வாளர்கள் மற்றும் சில உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை காவல்துறை தலைமை இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

இதனிடையே கரூர் நகர புதிய காவல் ஆய்வாளராக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல்

பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தண்டாயுதபாணி

தென்னிலை காவல் நிலையத்திற்கு அழகுராமு

வெங்கமேடு காவல் நிலையத்திற்கு சையத் அலி

சின்ன தாராபுரம் காவல் நிலையத்திற்கு ஓம் பிரகாஷ்

தோகமலை காவல் நிலையத்திற்கு விஜயகுமார்

க. பரமத்தி காவல் நிலையத்திற்கு ஈஸ்வரன்

தான்தோன்றி மலை காவல் நிலையத்திற்கு அகிலன்

கரூர் மாவட்ட சிறப்பு பிரிவிற்கு ராஜசேகர்

உள்பட மொத்தம் 10 காவல் ஆய்வாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்ததிடீர் பணியிட மாற்றமும் புதிய நியமனங்களும் கரூர் மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam