குமரி மாவட்டத்தில் தொடர் மழை- திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கன்னியாகுமரி, 20 மே (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர். அக்னி நட்சத்திர கா
திற்பரப்பு அருவி


கன்னியாகுமரி, 20 மே (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

அக்னி நட்சத்திர காலமாக இருந்தாலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கோடை விடுமுறை காரணமாக இன்று காலை முதலே குமரி குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மலையோர பகுதிகளில் நிலவும் இதமான காலநிலையும், அருவியில் மிதமான அளவில் கொட்டும் தண்ணீரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

குடும்பத்துடன் வந்தவர்கள் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்ததுடன், அருகிலுள்ள நீச்சல் குளத்திலும் குழந்தைகளுடன் உற்சாகமாக நேரத்தை கழித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam