Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 மே (ஹி.ச.)
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்றும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன.
முறையான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வசதிகள் வழங்காமல் வெளியேற்றப்படுவதாக கிராம மக்கள் மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்தனர்.
இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் சாசன பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், மாற்று வீடு மற்றும் விவசாய நிலம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம், அரசு உறுதியளித்தபடி தலா 2 சென்ட் வீட்டுமனை வழங்கும் நடைமுறையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P