Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 20 மே (ஹி.ச.)
பள்ளி, விடுதிகளின் பெயர்களில் உள்ள சாதிய அடையாளங்களை அகற்ற கோரி வழக்கு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நோட்டீஸ்
தமிழகத்தின் பள்ளி மற்றும் விடுதிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிய அடையாளங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயலர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை நேரு தெருவைச் சேர்ந்த ராகுல் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,
தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாதிய அடையாளங்கள் வெளிப்படையாக காணப்படுகின்றன.
கள்ளர் சீரமைப்பு இயக்குநரகத்தின் கீழ் 292 பள்ளிகளும் 54 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை சாதிய பெயர்களுடனேயே இயங்கி வருகின்றன.
இதனால் சமூக பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
எனவே, தமிழகத்தில் பள்ளி மற்றும் விடுதிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிய அடையாளங்களை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் பாரத சக்கரவர்த்தி மற்றும் பூர்ணிமா அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது,
வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயலர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam