புதிய ரேஷன் கார்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வெங்கட்ராமன் உறுதி
சென்னை, 20 மே (ஹி.ச.) புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு மிக விரைவாக அட்டைகள் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்ச
புதிய ரேஷன் கார்டு உடனடியாக வழங்க நடவடிக்கை - அமைச்சர் வெங்கட்ராமன் உறுதி


சென்னை, 20 மே (ஹி.ச.)

புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு மிக விரைவாக அட்டைகள் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது,

புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதமின்றி, உடனடியாக அட்டைகள் விநியோகம் செய்ய துறை ரீதியாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு விரைந்து ரேஷன் கார்டு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

உணவுத்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்தில் உள்ளன. அவற்றை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆய்வு செய்து தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் எதுவும் கிடப்பில் போடப்படாது. ஒவ்வொரு மனு மீதும் உரிய விசாரணை நடத்தி, உடனடியாக தீர்வு காணப்படும். மக்கள் நலனே அரசின் முதன்மை நோக்கம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

புதிய ரேஷன் கார்டு விநியோகத்தை விரைவுபடுத்தும் இந்த அறிவிப்பு, நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b