Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மே (ஹி.ச.)
திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய திராவிடப் பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மயங்கிக் கிடந்த தமிழினம் விழித்தெழ புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
அவருக்காக திருவுருவச் சிலை மற்றும் மணிமண்டபம் அமைத்ததையும், அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியதையும் “திராவிட மாடல் அரசின் பெருமை” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சாதிபேதமற்ற சமுதாயத்தை உருவாக்க ‘தமிழன்’, ‘திராவிடன்’ போன்ற சொற்களை அரசியல் களத்தில் ஆயுதமாக பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடித்து வாழ வேண்டும் என்றும், இளைஞர்கள் அவரது வழியில் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ