Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 20 மே (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே வடக்குவெளி பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடையின் அருகில் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அட்டை பெட்டிகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.
இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதிகாரிகள் 30 நாட்களுக்குள் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கடை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மர்ம நபர்கள் தீ வைத்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam