மாநிலங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் - மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி , 20 மே (ஹி.ச.) மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், மூலதன செலவு கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்களுக்கு
C


புதுடெல்லி , 20 மே (ஹி.ச.)

மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், மூலதன செலவு கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க தீர்மானித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்த தொகையின் 45 சதவீதம் முதல் காலாண்டிலேயே விடுவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிதி ரெயில்வே, நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரெயில், குடிநீர் வழங்கல் மற்றும் மின்சார திட்டங்கள் போன்ற முக்கிய அடிப்படை வசதி பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

2025-26 நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி நாடு முழுவதும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை மாநிலங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஏற்கனவே ரூ.20 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கியுள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள் மேலும் ரூ.70 ஆயிரம் கோடி வரை விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA