ரோர் Evo மாடல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு தமிழகத்தில் பலத்த வரவேற்பு..!
கோவை, 20 மே (ஹி.ச.) இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும், எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஓபென் எலக்ட்ரிக் (Oben Electric) ஆனது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ''ஓபென் ரோர் ஈவோ'' (Oben Rorr Evo) எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு ந
க


கோவை, 20 மே (ஹி.ச.)

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும், எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஓபென் எலக்ட்ரிக் (Oben Electric) ஆனது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஓபென் ரோர் ஈவோ' (Oben Rorr Evo) எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு நுகர்வோரிடையே கிடைத்துள்ள பலத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் தனது ரீடெயில் விற்பனை நெட்வொர்க்கை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை இன்று அறிவித்துள்ளது.

வரும் நிதியாண்டு 27-ன் (FY27) இறுதிக்குள் தமிழகம் முழுவதும் 25 ஷோரூம்களை திறந்து, வணிகத்தை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரோர் ஈவோ (Rorr Evo) மாடலுக்கு சந்தையில் கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்த விரிவாக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள்ளேயே 25,000-க்கும் அதிகமான முன்பதிவுகளைக் கடந்து, இந்தியாவின் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பிரிவில் தேவைகளுக்கான ஒரு தீர்வாக இந்நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

இந்த விரிவாக்கம் குறித்து ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான மதுமிதா அகர்வால் கூறுகையில்,

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தைகளில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து உருவெடுத்து வருகிறது, மேலும் இந்த மாற்றத்தில் கோவை முக்கிய பங்கு வகிக்கிறது.

ரோர் ஈவோ (Rorr Evo) மாடலுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு, இந்திய நுகர்வோரிடையே அதிக செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்து வருவதை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலான எங்களின் விரிவாக்கம், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஓபென் உரிமையாளர் அனுபவத்தை (ownership experience) மிக அருகில் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறது

அதே வேளையில் சேவைக்கான அணுகல் மற்றும் நீண்ட கால ஆதரவு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, என்றார்.

Hindusthan Samachar / Durai.J