பழைய குற்றால அருவியில் கட்டண வசூல் வழக்கு தள்ளுபடி
தென்காசி, 20 மே (ஹி.ச.) தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள பழைய குற்றால அருவியானது தற்போது வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் சென்று உள்ள நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், பழைய குற்றால அருவியில்
Madurai High Court


தென்காசி, 20 மே (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள பழைய குற்றால அருவியானது தற்போது வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் சென்று உள்ள நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், பழைய குற்றால அருவியில் இனிவரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க நபர் ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் வசூல் செய்யப்படும் என தென்காசி மாவட்ட வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்கு விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்காலிகமாக அந்த அறிவிப்பானது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பொது மக்களின் கருத்து கேட்ட பின்னரே அது தொடர்பாக முடிவு செய்யப்படும் எனவும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பணிகள் குளிக்க ரூ.20 கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து சுந்தரபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக இதுபோன்ற கட்டணங்கள் வசூல் செய்யப்படுவது இந்தியா முழுவதும் உள்ள நடைமுறை எனவும் அதனால் மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN