Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 20 மே (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களின் நீதிமன்றக் காவலை வரும் 27ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இந்த 12 மீனவர்கள், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இலங்கை கடற்பரப்பை அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் வெளிச்சூரா நீதிமன்றம்த்தில் இன்று ஆறாவது முறையாக ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 12 பேரின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து வரும் 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாம்பன் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட காலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அவர்களது குடும்பத்தினரும், தமிழக மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மற்றும் இலங்கை அரசுகள் விரைந்து தலையிட்டு, சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN