புதுவை சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு - 28 உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு
புதுச்சேரி, 20 மே (ஹி.ச.) புதுச்சேரி சட்டசபையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட 28 எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். கவர்னர் கைலாஷ்நாதன் நியமித்த தற்காலிக சபாநாயகரான அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழ
சபா


புதுச்சேரி, 20 மே (ஹி.ச.)

புதுச்சேரி சட்டசபையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட 28 எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர்.

கவர்னர் கைலாஷ்நாதன் நியமித்த தற்காலிக சபாநாயகரான அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் சபை கூடியது.

சட்டமன்ற செயலாளர் தயாளன், தற்காலிக சபாநாயகர் நியமன உத்தரவை வாசித்ததைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் பதவியேற்பு நடைமுறை தொடங்கியது.

முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் வரிசையாக உறுதிமொழி வாசித்து பதவியேற்றனர்.

இதற்கிடையில், எம்எல்ஏ நேரு உறுதிமொழியில் இல்லாத ஒரு வாசகத்தை குறிப்பிட்டதால், அதை சபைக் குறிப்பிலிருந்து தற்காலிக சபாநாயகர் நீக்கினார்.

மேலும், தவெக எம்எல்ஏ சாய் சரவணகுமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

அவர் பின்னர் சபாநாயகர் அறையில் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற கேலரியில் எம்எல்ஏக்களின் குடும்பத்தினர் அதிகளவில் திரண்டதால் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலையிட்டு நிலைமையை சீர்செய்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P