மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு - மலையாளத்தில் பதவியேற்ற பாகூர் எம்.எல்.ஏ செந்தில்குமார்
புதுச்சேரி, 20 மே (ஹி.ச.) புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மலையாள மொழியில் பதவியேற்றுக்கொண்டது கவனம் ஈர்த்தது. முன்னத
பதவியேற்பு


புதுச்சேரி, 20 மே (ஹி.ச.)

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மலையாள மொழியில் பதவியேற்றுக்கொண்டது கவனம் ஈர்த்தது.

முன்னதாக மத்திய அரசு பிரெஞ்சு மொழியை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில், செந்தில்குமார் பிரெஞ்சு மொழியில் பதவியேற்க தற்காலிக சபாநாயகரிடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் மலையாள மொழியில் பதவியேற்றுக்கொண்டார்.

இதனிடையே மணவெளி தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் ராமு பதவியேற்றுக்கொண்டார். அப்போது நடிகர் விஜயின் படத்தை காட்டியபடி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து, அந்த காட்சியை அவை குறிப்பில் இருந்து நீக்கவும், ஒலிபரப்பு செய்ய வேண்டாமெனவும் தற்காலிக சபாநாயகர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam