Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 20 மே (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) ஆகிய வசதிகள் உள்ளன.
இழுவை ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்களிலும் மலைக்கோயிலை அடையலாம். பழநி மலையின் அழகை ரசித்தபடி, ரோப் காரில் செல்லவே பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரோப் கார் சேவைக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்கள் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.
அந்த வகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரோப் கார் சேவை மே 22ஆம் தேதி இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக பழனி ரோப்கார் சேவை மே 22ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டது.
எனவே, இந்த நாட்களில் பழநி மலைக்கோயிலுக்கு வர திட்டமிட்டுள்ள பக்தர்கள், மின் இழுவை ரயில், படிப்பாதை அல்லது யானைப் பாதை போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b