Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 20 மே (ஹி.ச.)
சேலம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் மட்டும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இந்த நிலையில், நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மிரட்டல்கள் வந்துவருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு மற்றும் கண்டறியும் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் ரூபியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆட்சியர் அலுவலகக் கட்டிடம், வாகன நிறுத்துமிடம், பொதுமக்கள் வருகை தரும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் முழுமையான ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு கருதி அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதால், இந்த மிரட்டல்களை விடுப்பது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN