டெண்டர் நடைமுறையில் முறைகேடு நடந்ததா? – அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை, 20 மே (ஹி.ச.) ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற 24 மணி நேரத்திற்குள் புதிய டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் என். ஆனந்த் ப
அறப்போர்


சென்னை, 20 மே (ஹி.ச.)

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற 24 மணி நேரத்திற்குள் புதிய டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமைச்சர் என். ஆனந்த் பொறுப்பேற்ற பின்னர் வெறும் 6 மணி நேர அவகாசத்தில், காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசரமாக புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனம் இவ்வளவு குறுகிய காலத்தில் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்து, திட்ட அறிக்கை (DPR) தயாரித்து, முறையான டெண்டர் விண்ணப்பத்தை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை தகுதி வாய்ந்த பிற நிறுவனங்கள் பங்கேற்கும் வாய்ப்பை குறைத்து, குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவாக அமையும் “ஒப்பந்த முறைகேடு” ஆக இருக்கக்கூடும் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தின் (TN Transparency in Tenders Act) நோக்கத்தையே பாதிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை குறித்து, வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்தும் தவெக தலைவர் ஜோசப் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், இந்த அவசர டெண்டர் நடவடிக்கைக்கு நியாயமான காரணங்கள் இருந்தால் அதை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P