தேனியில் மது போதையில் ரகளை- பார் மூடிய பிறகும் மது கேட்டு தகராறு செய்த காவலர் உட்பட 2 பேர் கைது
தேனி, 20 மே (ஹி.ச.) தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் எதிரே “ஜாலி மனமகிழ் மன்றம்” என்ற பெயரில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. நேற்று இரவு கடை மூடிய பின்னர் அங்கு வந்த இருவர், கதவை திறந்து மது வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத
கைது


தேனி, 20 மே (ஹி.ச.)

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் எதிரே “ஜாலி மனமகிழ் மன்றம்” என்ற பெயரில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது.

நேற்று இரவு கடை மூடிய பின்னர் அங்கு வந்த இருவர், கதவை திறந்து மது வழங்க வேண்டும் என வலியுறுத்தி மது போதையில் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கிருந்தவர்களை பாட்டிலை உடைத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவஇடத்துக்கு வந்த பெரியகுளம் காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து அழைத்து செல்ல முயன்றபோது, அவர்கள் போலீசாரையே தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் கட்டுப்படுத்தினர்.

ஆட்டோவில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோதும் இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல் துறை வாகனத்தில் ஏற்றி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தென்காசி மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலர் சிதம்பரம் என்பதும், அவர் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்திருந்தபோது நண்பர் அன்புவுடன் மது அருந்தி இந்த ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இருவர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடை மூடிய பிறகும் கூடுதல் மது கேட்டு காவலர் ஒருவரே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam