Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக தூத்துக்குடி எம்.எல்.ஏவும், முதல்வர் விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து கமலி, விஜயலட்சுமி, வினோத், ராஜீவ், ரஞ்சித்குமார், விஜய் பாலாஜி உள்ளிடோருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக ஆளுநர் மாளிகை இன்று (மே 21) காலை வெளியிட்டது.
அந்த பட்டியலில், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் தூத்துக்குடி எம்.எல்.ஏவுமான ஸ்ரீநாத், குமாரப்பாளையம் எம்.எல்.ஏ விஜயலட்சுமி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ ரஞ்சித்குமார், சேலம் கிழக்கு எம்.எல்.ஏ விஜய் தமிழன் பார்த்திபன், வேளச்சேரி எம்.எல்.ஏ குமார், கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ வினோத், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ ராஜீவ், கடலூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜ்குமார், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ தென்னரசு, அவினாசி தொகுதி எம்.எல்.ஏ கமலி, அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ காந்திராஜ், ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ மதன் ராஜா,
ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகதீஸ்வரி, கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் குமார், ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ விஜய் பாலாஜி, முன்னாள் சபாநாயகர் தனபால் மகனும், ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏவுமான லோகேஷ் தமிழ்செல்வன், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன், கோயம்புத்தூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ சம்பத் குமார், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ சரத்குமார், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி எம்.எல்.ஏ மரிய வில்சன், கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ விக்னேஷ், அரந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ முகமது பர்வேஸ் ஆகியோர் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இதில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் முதன் முறையாக முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
அதே போல் தவெக அமைச்சரவையில் கீர்த்தனா, கமலி, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி என 4 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல், தவெக அமைச்சரவையில் 7 பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b