Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக அமைச்சர் அவையில் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் தனபால் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனபால்,
அதிமுகவில் தொடர்ச்சியாக தான் புறக்கணிக்கப்பட்டதாகவும், கட்சியின் தலைவராக உள்ளவர் பல தவறுகள் செய்துள்ளதாகவும் அதற்கான பலனை தற்போது அனுபவிப்பதாகவும் சாடினார்.
சைக்கிளில் சென்று கட்சியை வளர்த்த தம்மை இன்று ஒதுக்கிவிட்டு அதிமுகவில் அரசியல் செய்வதாகவும் அதனாலயே இரு பிரிவுகளாக இந்த பிளவு பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
தாம் எப்போதோ அதிமுகவிலிருந்து விலகி விட்டதாகவும் மகனின் அரசியல் வளர்ச்சிக்கு துணை இருக்க போவதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P