ஆந்திரப் பிரதேச அரசியலில் கொலை அரசியல் நடத்துவது சந்திரபாபு நாயுடு தான் - ஜகன் மோகன் ரெட்டி
அமராவதி , 21 மே (ஹி.ச.) மாநிலத்தில் கோடாரி அரசியல் யாருடையது? துப்பாக்கி கலாசாரம் யாரிடம் உள்ளது? சதி அரசியல் யார் செய்கிறார்கள்? என்பதற்கு சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை
A


அமராவதி , 21 மே (ஹி.ச.)

மாநிலத்தில் கோடாரி அரசியல் யாருடையது? துப்பாக்கி கலாசாரம் யாரிடம் உள்ளது? சதி அரசியல் யார் செய்கிறார்கள்? என்பதற்கு சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

ஒய்எஸ்ஆர்சிபி மீது பழிசுமத்துவதற்காக சந்திரபாபு மற்றும் சில ஆதரவு ஊடகங்கள் இணைந்து மாஃபியா போன்று செயல்பட்டு, பொய்யான தகவல்கள் மற்றும் போலி ஆதாரங்கள் உருவாக்கி திசைதிருப்பும் அரசியல் செய்து வருகிறார்கள் என்று ஜகன் குற்றம்சாட்டினார்.

கொலை அரசியலில் தங்கள் குடும்பமே மிகப்பெரிய பாதிக்கப்பட்ட குடும்பம் என கூறிய ஜகன், 1999 தேர்தலுக்கு முன்பு தனது தாத்தா ராஜா ரெட்டி கொலை செய்யப்பட்டதாக நினைவுகூர்ந்தார்.

அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு ஆட்சியிலேயே இந்த சம்பவம் நடந்ததாகவும், ஒய்.எஸ். குடும்பத்தை புலிவேந்துலுக்கு மட்டுமே கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கொலை நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முன்னாள் முதலமைச்சர் வை.எஸ். ராஜசேகர ரெட்டி மரணம் குறித்தும் ஜகன் சந்தேகம் எழுப்பினார்.

சட்டப்பேரவையில் கூறிய கருத்துகளுக்கு பிறகு சில நாட்களிலேயே அவர் விபத்தில் உயிரிழந்தது சந்தேகத்திற்கு இடமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் தஸ்தகிரி என்ற நபர் டிவி நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டிருந்தாலும், தற்போது அவர் சுதந்திரமாக சுற்றி வருகிறார் என்று ஜகன் விமர்சித்தார்.

சந்திரபாபுவுக்கும் தஸ்தகிரிக்கும் ஒரே வழக்கறிஞர் இருப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது என்றார்.

மேலும், சந்திரபாபுவின் உறவினரான நந்தமூரி பாலகிருஷ்ணா துப்பாக்கியால் இருவரை சுட்ட சம்பவத்தையும் ஜகன் குறிப்பிட்டார்.

நந்தமூரி ஹரிகிருஷ்ணா மரணத்தின் போதும் அரசியல் பேச்சுவார்த்தை நடந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

அதேபோல், நந்தமூரி தாரக ராமாராவ் மீது துரோகம் செய்து அதிகாரத்தை கைப்பற்றியதாகவும் சந்திரபாபுவை ஜகன் விமர்சித்தார்.

விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருந்த வங்கவீட்டி மோகன ரங்கா கொலை வழக்கில் குற்றவாளி தற்போது தெலுங்குதேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்றும் அவர் கூறினார். மல்லேல பாப்ஜி மரணம் குறித்தும் சந்தேகங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

நான் நல்லவன் என்பதால் தான் எங்கள் தாத்தாவை கொன்றவர்கள் இன்று சுதந்திரமாக உள்ளனர். நான் கெட்டவனாக இருந்தால் அவர்கள் இப்படி இருக்க முடியுமா?” என்று ஜகன் கேள்வி எழுப்பினார்.

மதிப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் தான் அரசியல் செய்கிறேன் என்றும், சந்திரபாபு சதி அரசியலில் ஈடுபடுகிறார் என்றும் ஜகன் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், சந்திரபாபுவுக்கு இதுவே கடைசி அரசியல் காலமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA