Enter your Email Address to subscribe to our newsletters

மங்களகிரி , 21 மே (ஹி.ச.)
மங்களகிரியில் உள்ள முகாம் அலுவலகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
(பி சி பி ) அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்
ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் கல்யாண் கலந்து கொண்டார்.
அப்போது,அவர் பல
அறிவுறுத்தல்களை மாசு கட்டுப்பாடு வாரியத் துறை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
பின்னர் பேசி அவர்,நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிற்சாலைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவில் மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் முக்கியம்.
நியமங்களை மீறி மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெறும் அறிக்கைகள் தயாரிப்பதில் மட்டுமே இருப்பதில்லை; செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு மாசை கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வுக் குழுக்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, பாதிக்கப்பட்ட மக்களையும் உறுப்பினர்களாக இணைக்க வேண்டும் என அவர் முக்கிய ஆலோசனை வழங்கினார்.
சத்த மாசு கட்டுப்பாடு தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் பொருந்தும்; தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட யாருக்கும் விதிவிலக்கு இல்லை எனவும் தெளிவுபடுத்தினார்.
சில தொழிற்சாலைகள் சட்டப்படி ‘கிரீன் பெல்ட்’
(பசுமை வளையம்) அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கோஸ்தனி நதி கடுமையாக மாசடைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, அங்கு சுற்றுச்சூழல் அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
நதியில் கழிவுகளை வெளியிடும் தொழிற்சாலைகளை ட்ரோன் மற்றும் வீடியோ கேமராக்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
நெல்லூர் மாவட்டத்தில் ‘வெள்ளை வகை’ தொழிற்சாலைகளில் சில மாசு ஏற்படுத்துகின்றன என்ற புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மாநிலத்தின் 13 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ‘நேஷனல் கிளீன் ஏர் புரோகிராம்’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடி நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்த நிலையில், ஆட்சேர்ப்பு கோப்புகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் பவன் கல்யாண் உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA