ஜெகன் புகைப்படத்தால் தானா விஜய் வெற்றி – ஜெகன் விளக்கம்
ஆந்திரா , 21 மே (ஹி.ச.) சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தவேக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று, மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். தமிழக வெற்றி கழகம் கட்சி பெற்
A


ஆந்திரா , 21 மே (ஹி.ச.)

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தவேக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று, மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.

பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

தமிழக வெற்றி கழகம் கட்சி பெற்ற வெற்றியை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான வை.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தனது கருத்தை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்,விஜயின் வெற்றி முழுமையாக அவரது கடின உழைப்பின் பலன் என்று ஜெகன் பாராட்டினார்.

இந்நிலையில்,

பத்திரிக்கையாளர் சந்திப்பில்தேர்தல் பிரசாரத்தில் ஜெகன் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதே வெற்றிக்கு காரணமா என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

அவருடைய மாநிலத்தில் அவருக்கே செல்வாக்கு இருக்கும் எனக்கு எப்படி இருக்கும்? என்று தாழ்மையாக தெரிவித்தார்.

இதன் மூலம் விஜயின் வெற்றியில் தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என்றும், அது முழுவதும் விஜயின் தனிப்பட்ட கவர்ச்சி மற்றும் உழைப்பின் விளைவு என்றும் ஜெகன் மறைமுகமாக விளக்கமளித்தார்.

மேலும், சமூக வலைதளங்கள் வாயிலாக விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்,

என் நண்பரும் சகோதரருமான விஜய் முதல் முயற்சியிலேயே கட்சியை மிகப்பெரிய கட்சியாக மாற்றியிருப்பது சிறப்பான சாதனை என்று குறிப்பிட்டார்.

.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA