Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச)
சென்னையில் உள்ள பிஎஸ்கே மற்றும் டிஎஸ்எல் ஸ்டீல்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள் மற்றும் பிற தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
2007 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த நிறுவனங்கள் போலியான நிதி அறிக்கைகளைத் தாக்கல் செய்து, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து சுமார் ₹311 கோடி அளவுக்குக் கடன் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
சோதனையின் போது, பினாமி பெயரில் வாங்கப்பட்ட 43 சொத்துகளின் ஆவணங்கள், முக்கியமான கோப்புகள், ஹார்டு டிஸ்குகள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் சந்தை மதிப்பு ₹100 கோடிக்கும் மேல் இருக்கும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கி மோசடி மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணம் எவ்வாறு பினாமி சொத்துகளாக மாற்றப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் ஆழமாக விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b