Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 21 மே (ஹி.ச.)
தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் 65ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்றைய தினம் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக நாக்அவுட் சுற்று போட்டிகளின் முடிவில் நான்கு அணிகள் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றன.
அந்த வகையில் இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கு சென்னை இந்தியன் வங்கி, சென்னை விளையாட்டு விடுதி, புதுடெல்லி இந்திய விமானப்படை அணி மற்றும் புதுடெல்லி ஓ.என்.ஜி.சி அணிகள் முன்னேறின. இதில் இந்தியன் வங்கி - விமானப்படை அணியும், ஓ.என்.ஜி.சி மற்றும் விளையாட்டு விடுதி அணிகள் அரையிறுதியில் மோதின.
இதில் முதல் போட்டியில், சென்னை இந்தியன் வங்கி அணியும், புதுடெல்லி இந்திய விமானப்படை அணியும் மோதின.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன், அடுத்தடுத்து புள்ளிகளையும் கைப்பற்றி அசத்தியது.
இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் சென்னை இந்தியன் வங்கி அணி 85-66 என்ற புள்ளிகள் கணக்கில் புதுடெல்லி இந்திய விமானப்படை அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை இந்தியன் வங்கி அணியானது இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதுடெல்லி ஓ.என்.ஜி.சி அணியும், சென்னை விளையாட்டு விடுதி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் ஓ.என்.ஜி.சி அணியானது 94-80 என்ற புள்ளிகள் அடிப்படையில் சென்னை விளையாட்டு விடுதி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து சென்னை இந்தியன் வங்கி அணி மற்றும் புதுடெல்லி ஓ.என்.ஜி.சி அணிகளுக்கு இடையிலான தொடரின் இறுதிப் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN