நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் ஆவாரம் பூவின் சிறப்புகள்
சென்னை, 21 மே (ஹி.ச.) ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஒரு மிகச்சிறந்த காயகற்ப மூலிகை ஆவாரம் பூ (Cassia auriculata) ஆகும். பிரகாசமான மஞ்சள் நிறத்தைக் கொண்ட
Benefits of the Aavaram Flower


சென்னை, 21 மே (ஹி.ச.)

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஒரு மிகச்சிறந்த காயகற்ப மூலிகை ஆவாரம் பூ

(Cassia auriculata) ஆகும்.

பிரகாசமான மஞ்சள் நிறத்தைக் கொண்ட இப்பூக்கள், தங்களுக்குள் தங்கம் போன்ற மருத்துவக் குணங்களை ஒளித்து வைத்துள்ளதால் இது ஏழைகளின் தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் தைப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நாட்களில் வீடுகளுக்குக் காப்புக் கட்டுவதற்கும் மாடுகளுக்கு மாலை அணிவிப்பதற்கும் இப்பூக்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் மிக முக்கிய இடம்பிடித்துள்ள ஆவாரம் பூ பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன. அவை பின்வருமாறு:

நீரிழிவு நோய்

(சர்க்கரை வியாதி) கட்டுப்பாடு இன்சுலின் சுரப்பு:

உடலில் இன்சுலின் சுரக்கும் தன்மையை ஆவாரம் பூ இயற்கையாகவே அதிகரிக்கிறது.இரத்த சர்க்கரை அளவு:

ஆவாரம் பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

சருமப் பராமரிப்பு உடல் துர்நாற்றம் நீங்க:

ஆவாரம் பூ பொடியைக் குளியல் பொடியாகப் பயன்படுத்தும்போது உடல் துர்நாற்றம் மற்றும் வியர்வை நாற்றம் நீங்கும்.பளபளப்பான சருமம் கிடைக்கும். இது கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் சரும வறட்சியைப் போக்கி, முகத்திற்குத் தங்க நிறப் பொலிவைத் தருகிறது.

காயங்கள் குணமாக:

இதிலுள்ள நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தி காயங்கள் மற்றும் வீக்கங்களை விரைவில் ஆற்ற உதவுகிறது.

உடல் சூடு மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகள் நீங்க:

கடுமையான வெயில் காலங்களில் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து உடலைக் குளிர்ச்சியாக வைக்கிறது.பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்ப் பாதை தொற்று (UTI) மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை இது குணமாக்குகிறது

செரிமானம் மற்றும் உடலாரோக்கியம்:

உணவுக்கு முன் ஆவாரம் பூ தேநீர் அருந்துவது பசியைத் தூண்டி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் பிளாவநாய்ட்ஸ் (Flavonoids) மற்றும் டேனின்ஸ் (Tannins) போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துகிறது.

ஆவரம் பூக்களை சூரிய ஒளியில் உலர்த்தி பொடி செய்து காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். இதை மூலிகை தேநீராக்கி குடிக்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் பொடியை சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். இது நல்ல மலமிளக்கியாக செயல்படும். ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாகிறது.

பண்பாட்டுச் சிறப்பு

ஆவாரை மரத்தின் பூ, இலை, பட்டை, வேர், பிசின் ஆகிய ஐந்து உறுப்புகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை.

பூக்கள்: சர்க்கரை நோய் மற்றும் சருமப் பராமரிப்பிற்கு உகந்தது.

இலைகள்: உடல் வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்க உதவும்.

பட்டை: உடலுக்கு வலிமையைத் தரும்.

வேர்: சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

பிசின்: உடல் சூட்டைத் தணிக்கும்.

இந்த ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரை பஞ்சாங்கம் என்று சித்த மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது

செயற்கை இரசாயன அழகுப் பொருட்களையும், ஆற்றல் பானங்களையும் தேடி ஓடும் தற்போதைய தலைமுறை, நம் முன்னோர்கள் காட்டிய ஆவாரம் பூ போன்ற இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

Hindusthan Samachar / vidya.b