தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, பெண் உயிரிழப்பு- 10 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி, 21 மே (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் படுகாயமடைந்தனர். தேன்கனிக்கோட்டையிலிருந்து இராயக்கோட்டை நோக்கி டி.கே.பி என்ற தனியார் பேருந்து சென்று க
Bus


கிருஷ்ணகிரி, 21 மே (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் படுகாயமடைந்தனர்.

தேன்கனிக்கோட்டையிலிருந்து இராயக்கோட்டை நோக்கி டி.கே.பி என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது உள்ளுகுறிக்கி பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் இருந்த 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தமிழ்நாடு காவல்துறையின் இராயக்கோட்டை காவல் நிலையம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN