கோவையில் ‘மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி’ அறிமுக விழா
கோவை, 21 மே (ஹி.ச.) கோவையில் ‘மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி’ என்ற புதிய அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று போத்தனூரில் உள்ள மதினா ஹாலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கழகத் தொடக்கமும் தலைமையும் அப்துல் கபூர் (மக்கா பள்ளிவ
ல


கோவை, 21 மே (ஹி.ச.)

கோவையில் ‘மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி’ என்ற புதிய அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று போத்தனூரில் உள்ள மதினா ஹாலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கழகத் தொடக்கமும் தலைமையும் அப்துல் கபூர் (மக்கா பள்ளிவாசல் தலைவர்) மற்றும் ஜனநாயக வெற்றி கழக நிறுவனத் தலைவர்

A. ஒயிட் பாஷா ஆகியோர் முன்னிலையில் கட்சியின் தொடக்க விழா நிகழ்வுகள் துவங்கின.

இந்த விழாவிற்கு மனித நேய ஜனநாயக நீதிக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான கோவை இல்முதீன் தலைமை தாங்கினார்.

கட்சியின் பொதுச்செயலாளர் நூர் முகமது முன்னிலை வகித்து கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பு

இந்த அறிமுக விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில்,மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி மற்றும் வர்த்தக அணி செயலாளர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J