மணீஷ் பாண்டே அதிரடி- 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை அணியை வீழ்த்தியது கொல்கத்தா
கொல்கத்தா, 21 மே (ஹி.ச.) இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 65-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங
K


கொல்கத்தா, 21 மே (ஹி.ச.)

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 65-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. தொடக்க வீரர்கள் ரிக்கல்டன் 6 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும் அவுட்டானார்கள். தொடர்ந்து நமன் தீர் (0), சூரியகுமார் யாதவ் (15) ரன்களிலும் வெளியேறினர்.

பின்னர் திலக் வருமா மற்றும் கார்த்திக் பாண்டியா இணைந்து விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அப்போது 8 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் திலக் வர்மா 20 ரன்களிலும், பாண்டியா 26 ரன்களிலும் அவுட்டானார்கள். கார்பின் பாஷ் 32 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டது. பின் ஆலன் 8 ரன்களில் அவுட்டானார். ரகானே 21 ரன்களிலும், கேமரூன் கிரீன் 4 ரன்களிலும் வெளியேறினர்.

இந்த நிலையில் மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்கள் குவித்தார். அவருடன் ரோவ்மன் பாவெல் 40 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் 18.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணியின் பிளேஆப் வாய்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA