அமைச்சரவையில் ஐ.யூ.எம்.எல். பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சென்னை, 21 மே (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ளார். அ
காதர்


சென்னை, 21 மே (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை பிரதிநிதித்துவத்திற்காக பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விரைவில் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக வெற்றிக் கழக அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வமாக இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், இன்று பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், சிறுபான்மையினர் நலத்துறை மட்டும் இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சர் பதவி ஏற்கும் எம்.எல்.ஏ.வுக்கு அந்தத் துறை வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P