நாட்டில் முதல்முறையாக கேரளாவில் ஏ.ஐ. அமைச்சகம் பி.கே. குஞ்ஞாலிக்குட்டிக்கு முக்கிய பொறுப்பு
திருவனந்தபுரம் ,21 மே (ஹி.ச.) கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு டி எஃப் ) கூட்டணி அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளாக நீடித்த இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் 140 தொ
K


திருவனந்தபுரம் ,21 மே (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு டி எஃப் ) கூட்டணி அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளாக நீடித்த இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மொத்தம் 140 தொகுதிகளில் 102 இடங்களை கைப்பற்றியுள்ள இந்த கூட்டணி தெளிவான பெரும்பான்மையை பெற்றுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சதீசன் கேரளாவின் 24-வது முதல்-மந்திரியாக கடந்த 18-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் தனது 20 பேர் கொண்ட அமைச்சரவையுடன் பதவியேற்றார்.

புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ ) துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான ஏ.ஐ., தகவல் தொழில்நுட்பம் (ஐடி), தொழில் மற்றும் வர்த்தகம், ஸ்டார்ட்-அப் உள்ளிட்ட துறைகள் அனைத்தும் பி. கே. குஞ்ஞாலிகுட்டி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், முதல்-மந்திரி வி.டி. சதீசன் நிதித்துறையை தனது வசம் வைத்துள்ளார்.

உள்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், சிறைத்துறை ஆகியவை ரமேஷ் அவர்களுக்கும், மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் சன்னி ஜோசப் வர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளாவை தொழில்நுட்ப மையமாக மாற்றவும், செயற்கை நுண்ணறிவு வழிநடத்தும் நிர்வாகத்தை உருவாக்கவும் இந்த புதிய அமைச்சக அமைப்பு உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA