கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த மாற்றுத் திறனாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி, 21 மே (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி வெங்கடேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, மக்கள் குறைதீர்ப்பு
கிருஷ்ணகிரி


கிருஷ்ணகிரி, 21 மே (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி வெங்கடேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, மக்கள் குறைதீர்ப்பு முகாமில் நிலப்பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெங்கடேசன், திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, முதலில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார். நிலப்பிரச்சனை காரணமாக மாற்றுத் திறனாளி ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P